ஜனவரி 26ம் தேதி புதுதில்லியில் நடைபெற உள்ள 75 வது சுதந்திர ஆண்டின் குடியரசு தின அணிவகுப்பில் நடனமாட கோவையை சேர்ந்த ஸ்ரீ நாட்டிய நிகேதன் நடனப் பள்ளியை சேர்ந்த 14 மாணவிகள் தேர்வாகி உள்ளனர். புதுதில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் நடனமாட தமிழ்நாடு சார்பாக கோவையை சேர்ந்த ஸ்ரீ நாட்டிய நிகேதன் நடனப் பள்ளி மாணவிகள் தேர்வாகி உள்ளது கோவைக்கு பெருமை சேர்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ஸ்ரீ நாட்டிய நிகேதன் நடனப்பள்ளி இயக்குநர் மிருதுளா ராயிடம் கேட்கையில் குடியரசு தின அணிவகுப்பில் நடனமாட தன்னுடைய மாணவிகள் தேர்வாகியுள்ளது தனக்கு மிகவும் பெருமைக்குரிய ஒன்று என்றும் இந்த மாணவிகளின் கடின உழைப்பிற்க்கு கிடைத்த பலன் தான் இந்த வாய்ப்பு என்றும் தெரிவித்தார்.மேலும் இது குறித்து மாணவிகள் கூறுகையில் இது எத்தனை மேடையில் நடனமாடி இருந்தாலும் பல நடன போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் குடியரசு தின அணிவகுப் பில் இந்தியாவின் குடியரசு தலைவர் முன்பும், பிரதமர், மற்றும் அரசியல் தலைவர்கள்,ராணுவ அதிகாரிகள் முன்னிலையில் நடனமாடுவது என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் பிற மாநிலத்தில் இருந்து பங்கேர்த்த அணிகளின் நடனத்தை பார்க்கையில் அந்த அந்த மாநிலங்களின் கலாச்சாரத்தை கற்றுக்கொள்ள முடிகிறது என்றும் அவர்களின் நடன முறைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தனர் மேலும் இந்த வாய்ப்பு கிடைக்க முழு காரணமாக இருந்த அவர்களுடைய நடன குரு மிருதுளா ராயிக்கு மாணவிகள் அனைவரும் அவர்களின் நன்றியை தெரிவித்தனர்
டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் நடனமாடும் கோவை நாட்டிய நிகேதன் பள்ளி மாணவிகள்
