டி20: மே.இ. தீவுகள் அணியை எளிதாக வென்ற பாகிஸ்தான்

மேற்கிந்தியத் தீவுகள் அணி, பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. அனைத்து ஆட்டங்களும் கராச்சியில் நடைபெறுகின்றன. முதல் டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் குவித்தது. ரிஸ்வான் 78 ரன்களும் ஹைதர் அலி 68 ரன்களும் எடுத்தார்கள். பிறகு பேட்டிங் செய்த மே.இ. தீவுகள் அணி மோசமாக விளையாடி 19 ஓவர்களில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முகமது வாசிம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்ட நாயகன் விருது ஹைதர் அலிக்கு வழங்கப்பட்டது.

scroll to top