டிவி, ஸ்மார்ட் போன் விலை அடுத்த மாதம் உயர வாய்ப்பு

கோத்ரெஜ் அப்ளையன்சஸ் வர்த்தக பிரிவு தலைவர் கமல் நந்தி கூறியதாவது: கடந்த ஏப்., – ஜூன் காலாண்டில் சரக்கு பெட்டகத்தின் விலை, 2 லட்சத்து 62 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இது கடந்த மாதம் 5 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது. தற்போது, 4 லட்சத்து 48 ஆயிரம் ரூபாயாக குறைந்துள்ளது.
எனினும் ஜூன் நிலவரத்துடன் ஒப்பிடும்போது அதிகம் தான். இது தவிர மூலப் பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. அதனால் தயாரிப்பு பொருட்கள் குறிப்பாக டிவி, ஸ்மார்ட் போன், ரெப்ரிஜிரேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் விலை உயர்வு தவிர்க்க முடியாததாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

scroll to top