டாக்டர் சீட் வாங்கி தருவதாக கூறி 36 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி யைசேர்ந்தவர் டாக்டர் சிவசுப்பிரமணியன் 65 .இவரது மகளுக்கு டாக்டர் சீட்டுக்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது கோச்சடை லாலா சத்திரம் மேலக்கால் மெயின் ரோடு வை சேர்ந்த நடராஜன் மகன் பாலாஜி என்பவர் அறிமுகமானார். அவர் சென்னையில் உள்ள மருத்துவக்கல்லூரியில் டாக்டர் சீட்டு வாங்கி தருவதாக கூறி அதற்காக ஒரு கோடியே 60 லட்சம் கேட்டு உள்ளார் .அவர் கேட்ட தொகையை டாக்டர் சுப்ரமணியன் கொடுத்துள்ளார். ஆனால் அவர் கூறியபடி சீட்டு வாங்கி கொடுக்க முடியவில்லை .இந்த பணத்திலிருந்து ஒரு கோடியே 24 லட்சத்தை மட்டும் திருப்பிக் கொடுத்துவிட்டார். மீதமுள்ள முப்பத்தி ஆறு லட்சத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம்குறித்து டாக்கர் சிவசுப்பிரமணியன் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.