ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு; தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா பரவல் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மற்ற நாட்களில் இரவு நேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஞாயிற்று கிழமை தவிர மற்ற நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வார இறுதி நாட்களில் வழிப்பாட்டு தலங்களுக்கு அனுமதி இல்லை, கடைகளின் நேரத்தை குறைப்பது, இரவு நேர ஊரடங்கு, ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான வழிமுறைகள் ஆலோசிக்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

scroll to top