ஞாயிறு ஊரடங்கு : கோவையில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்

தமிழகம் முழுவதும் ஞாயிறு ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கோவை மாநகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமானதையடுத்து, இரவு நேர ஊரடங்கும், ஞாயிறு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் தினசரியாக சுமார் 500 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதேபோல் முக்கிய கடைவீதிகளான உக்கடம், ரங்கே கவுண்டர் வீதி, டவுன்ஹால், காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.

நகரம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், தேவையில்லாத காரணங்களுக்காக வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். இதனிடையே ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில் வெளியே வருபவர்களை அடிக்க மாட்டோம் என்றும் நியாயமான காரணங்களுக்காக வருபவர்களுக்கு உதவி செய்வோம் என்றும் மாநகர காவல் ஆணையர் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

scroll to top