‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது குழுவினர் அங்கீகாரம்

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான ‘ஜெய் பீம்’ சமூக நியதியை கருத்தாகக் கொண்ட திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. பிற்படுத்தப்பட்ட இருளர் சமுதாயத்தைப் பற்றிய நிஜ சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சர்ச்சைக்கு மத்தியில் ஓ.டி.டி. தளத்தில் வெளியான இந்த திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது.

தற்போது இந்த படத்தை ஆஸ்கர் விருது குழு நிர்வகித்து வரும் யூ-டியூப் சேனலில் அக்குழுவினர் வெளியிட்டிருக்கின்றனர். ஆஸ்கர் யூ-டியூப் சேனலில் வெளியாகும் முதல் இந்திய திரைப்படம் ‘ஜெய் பீம்’ என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

scroll to top