மதுரை மார்ச் 28. ஜெய்ஹிந்த்புரம் முதல் தெருவை சேர்ந்தவர் நல்லுசாமி மகன் ராமு38. இவர் ஜெய்ஹிந்த்புரம்மெயின் ஹஜ் ரோட்டில் உள்ள ஒரு பள்ளிஅருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை வழிமறித்த 2 வாலிபர்கள் அவரை கத்திமுனையில் மிரட்டி அவர் வைத்திருந்த ரூபாய் 2ஆயிரத்தை பறித்துச்சென்று விட்டனர் .இந்த சம்பவம் குறித்து ராமு கொடுத்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவுசெய்து எம் கே புரத்தைச் சேர்ந்த சௌந்தரபாண்டியன் என்ற பச்சைகாரிசவுந்தர் 39, சோலைஅழகுபுரம் ஜானகி நகரைச் சேர்ந்த முத்து இருளாண்டி மகன் சத்தியமூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.