ஜெயிக்க வச்சீங்கன்னா செஞ்சு காண்பிப்போம்!’’ சூளுரைத்துக் களமிறங்கும்

kumaran.jpeg

பாஜக வேட்பாளர் குமரன் பேட்டி

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடித்து விட்டது. முதல் ஆளாக கூட்டணி யிலிருந்து வெளியேறி வார்டு வாரியாக தம் வேட்பாள ர்களை அறிவித்திருக்கி றது தமிழக பாஜக. அதில் முன்னணி வகிப்பது கோவை இங்கே மேயருக்கான பதவி பெண்களுக்கு என்பதால் மக்க ளால் தேர்ந் தெடுக் கப்படும் ஆண் கவுன்சிலர் களுக்கு துணை மேயர், மண்டலத் தலைவர்கள் ஆவதற்கு மட்டுமே வாய்ப்பு. அப் படியான வாய்ப்பில் உள்ள கவுன்சிலர்கள் வெகுசிலரே. அப்படி யான முக்கிய விஐபி வேட்பாளர்களை சந்தித்துப் பேட்டி கண்டால் என்ன என்று தோன்றியது.
அதில் பாஜகவில் முதலாவதாக இடம் பிடிப்பவர் டி.ஆர்.குமரன்.
இப்படி சொன்னால் யாருக்குத் தெரியுமோ இல்லையோ, கோவை வியாபாரக் கேந்திரத்தின் இத யப்பகுதியாக வீற்றி ருக்கும் தியாகி குமரன் மார்க்கெட், ஒப் பணக்கார வீதி, உப்பார வீதி சந்திப்பில் முக்கிய ஜவுளிக்கடையாக விளங்கும் ராஜேந்திரா டெக்ஸ்டைல் உரிமையாளர் டி.பி.கிரு ஷ்ணன் அவர்களின் பேரன், டி.கே.ரவீந்திரன் அவர்களின் மகன் குமரன் என்று சொன்னால் அறிமுகமில்லாதவர்க ளுக் கும் சுலபமாக அறிமுகமாகி விடும். இனி அவரின் பேட்டிக்குள் செல் வோம்.
கேள்வி: நீங்க பாஜகவில் எத்தனை ஆண்டுகளாக உள்ளீர்கள். பெரிய அளவில் உங்களை நாங்கள் பிரபல்ய வெளிச்சத்தில் பார்த்ததில் லையே?
பதில்: அரசியல் ரீதியாக பிரபல்ய வெளிச்சம் படா மல் எங்களை நாங்கள் பார்த்துக் கொண்டோம் என்றால் ரொம்ப சரிதான். ஏனென்றால் என் தாத்தா டி.பி.கிருஷ்ணன் அந்தக் காலத்திலேயே ஒரு அரசியல் கட்சியில் இருந்தார். அடுத்து என் அப்பாவும் ஒரு அரசியல் கட்சியை சார்ந்திருந்தார். இரு வருமே கட்சி அரசியலில் களம் இறங்கவில்லை. வியாபாரம் முழுநேரத் தொழிலாக, நம்மை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர் குடும் பங்கள் வாழ்வதால், லட்சோப லட்சம் வாடிக்கையாளர்களு டன் நெருங்கி நின்றதால் அதில் முழு மையாக கவனிக்க வேண்டிய நிலை. தவிர அப்பா கோயமுத்தூர் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். மேலும் கோவை, ராஜவீதியில் உள்ள கோவை துணி வணிகர் சங்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி யின் வளர்ச்சிக்குழு தலைவராக இருக்கி றார். அதன் மூலம் பல்வேறு சேவைக்கான விருதுகள், பாரா ட்டுகள் பெற்றிருக்கிறார்.
அந்த நற்பெயரை காப்பாற்றுவதே எங்களுக்கான பெருங் கடமையாக இருந்து வருகிறது. என்னுடைய விஷயமும் அப் படித்தான். ஒரு கட்டத்தில் அப்படியே நாமும் இருந்து விடக்கூடாது என்ற எண்ணம் வரவேதான் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு பாஜகவில் அர்பன் ரூரல் டெவலப்மெண்ட் துணை தலைவராக பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். அதன் மூலம் நான் தனிப்பட்ட முறையில் செய்யாத பொது காரியங்கள் பலவற்றை இயக்க ரீதியாக வரும்போது செய்ய முடிந்தது. உதாரணமாக கோவை கவுண்டம்பாளையம் அருகே இருந்த பழமையான கோயிலை அப்புறப்படுத்தப் பார்த்தார்கள். அதை அப்போதைய எங்கள் தலைவர் எல்.முருகன் அவர்களிடம் மனு கொடுத்து திரும்ப கட்டிக் கொடுத் தோம். இங்கே மார்க்கட் பகுதியில் பல்வேறு பிரச் சனைகளை இயக்கமாக முன்னெ டுக்க முடிந்தது.
கேள்வி: கோவை குண்டு வெடிப் பில் நேரடியாக பாதிக்கப்பட்டவர் நீங்கள். அந்த அனுபவத்தை சொல்ல முடியுமா?
பதில்: 1998 பிப்ரவரி 14. அத்வானி அவர்கள் வருகையின்போது அவர் ஆர்.எஸ்.புரம் மேடையில் பேசும் நேரத்தை கணித்து மேடைக்கு அருகில் மட்டுமல்ல, மக்கள் கூடும் பல்வேறு வியாபார கேந் திரங்களிலும் சில சமூக விரோதிகள் குண்டு வைத்திருந்தார்கள். அதில் எங்கள் கடையும் ஒன்று. கடையில் அப்போது நானிருந்தேன். சரியாக 3.45 மணிக்கு குண்டு வெடித்தது. 7 பேர் இறந்துட்டாங்க. 22 பேர் படுகாயமடைஞ் சாங்க. காயமடைந்து நினைவு தப்பியதில் நானும் ஒருவன். பின் தலையில் ஷட்டர் விழுந்தில் அடி முதுகுல குண்டின் பில்லட்ஸ் எனப்படும் இரும்புத்தூள்கள் பாய்ந்தது. நெஞ்சில், சோல்டருக்கு கீழே படு காயம். அந்த தழும்பு பெரிசா இப்பவும் இருக்கு. (காட்டுகிறார்).
படுக்கையில் 25 நாட்கள் இருந்தேன். குண்டு வெடித்ததில் எழுந்த எக்கோ’ சவுண்டில் 3 மாதங்கள் சுத்தமாக காதுகள் கேட்காமல் இருந்தது. ஜனங்களுக்கு ஏதாவது செய்யனும் பொதுவாழ்வில் இருந்து கொண்டு ஏதாவது நல்லது செய்யணும். அதுதான் இப்ப என்னை மட்டும் இந்த அரசியலுக்கு இழுத்துட்டு வந்திருக்கோ’ன்னு எண்ணத் தோணுது.
கேள்வி: நீங்கள் போட்டியிடும் கோவை மாநகராட்சி 81-வது வார்டு சற்றே சவாலான பகுதி. அதுவும் கோயமுத்தூரின் ஒட்டுமொத்த வியாபார ஸ்தலமே இதற்குள் அடங்கி விட்டது என்று சொல்லலாம். சுருக்கமாக சொன் னால் இதுதான் 1980-க்கு முந்தைய பழைய மாநகராட்சி. நிறைய பிரச்சனைகள் இருக்கும். பல சமூகம், பல்வேறு மொழி பேசும் மக்கள். எப்படி அவர்களிடம் வாக்கு சேகரிக்கப் போகிறீர்கள்?
பதில்: உண்மைதான். இந்த வார்டில் மட்டும் 33 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளார்கள். பெரிய கடைவீதி, ராஜவீதி, வைசியாள் வீதி, தெலுங்கு பிராமணாள் வீதி, ஒப்பணக்கார வீதி, ரங்கே கவுடர் வீதி, சி.எம்.சி.காலனி, அய்யாசாமி கோயில் வீதி, ராமர் கோயில் வீதி, தியாகி குமரன் வீதி (மார்க்கெட்), உப்பார வீதி இப்படி எல்லாமே வியாபார ஸ்தலங்கள் நிறைந்த பகுதி ஆகும். சாக்கடை தோண்டியது தோண்டிப் போட்ட மாதிரியே கிடக்குது. சாலைகள் குண்டும் குழியுமாக கிடக்கிறது. சின்ன மழை பெய்தால் கூட மழை நீர் வடிகிற அளவுக்கு பாதாளச் சாக்கடையில் வடிகால் வசதி இல்லை. நான் இங்கேயே குடியிருப்பதால் மற்ற வியாபாரிகளுடன் வியாபாரியாக, வாடிக்கையாளர்களு டன் வாடிக்கையாள ராக அறிமுகமாகி இருப்பதால், பிரச் சனைகளை நானே அனுபவித்துக் கொண்டிருப்பதால் நான் செய்வேன் என்பது இங்குள்ளவர்களுக் குத் தெரியும். அப்படியே தெரியாவிட்டாலும் யாரு நம்ம ரவி அண்ணன் பையன் குமரன்தான் கவுன் சிலரு? அவங்க அப்பா கிட்ட சொன்னா, தானா வேலை நடந்துடும்!’ன்னு அவங்களுக்கே தெரியும்.
கேள்வி: மக்களிடம் வாக்கு சேகரிக்கச் செல்லும் நேரத்தில் வாக்குறுதி என் னென்ன தருவதாக உத்தேசித்துள்ளீர்கள்?
பதில்: இதுவரை தேர்தலுக்குத் தேர்தல் வாக்குறுதி தந்து சென்றவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? பாதி வாக்குறுதிகளைக் கூட செய்து தரவில்லை என்பதுதானே உண்மை. அதனால் வாக்குறுதியே தராமல் இந்த பகுதிக்கு என்ன தேவையோ அதை உணர்ந்து புரிந்து செய்வேன். ஜெயிக்க வச்சீங்கன்ன செஞ்சு காண்பிப்பேன் என்பதுதான் என் முழக்கமாக இருக்கும். எங்கள் பிரச்சார அணுகுமுறையே வித்தியாசமாக இருக்கும். அதைத்தான் எங்கள் கட்சித் தலைமையும் செய்யச் சொல்லி வழிகாட்டுகிறது.
கேள்வி: இன்றைக்கு வலுவான ஆளுங்கட்சி திமுக. வாக்கு வங்கியில் வலுவான அதிமுக. இரண்டையும் தாண்டி நீங்கள் இந்த முக்கியமான வார்டில் வெல்ல முடியும் என நம்புகிறீர்களா?
பதில்: நிச்சயமாக. ஆண்டவரின் அருளால் மக்களின் எண்ணத்தால் அது நடக்கும். அப்பா மீதும், தாத்தா மீதும் அபரிமிதமான மரியாதை வைத்துள்ள மக்கள் எங்கள் வார்டு வாக்காளர்கள். அது வெற்றிக் கனியை நிச்சயம் ஈட்டிக் கொடுக்கும்.
கேள்வி: கோவை மாநகராட்சியில் தனித்து களம் காணும் பாஜக எத்தனை சீட் வெல்லும் என நினைக்கிறீர்கள்?
பதில்: நூற்றுக்கு நூறு என்று பொதுவாக பேசும் அரசியல் கட்சிகள் அல்ல நாங்கள். இங்கே செல்வ மகள் சேமிப்புத்திட்டம் போன்ற பாரதப் பிரதமர் மோடியின் திட்டங்களை மக் களிடம் கொண்டு போக இங்குள்ள அரசுகள் தயாராயில்லை. அதையெல்லாம் வடக்கே உள்ளவர் கள்தான் சிறப்பாக அனுபவிக்கிறார்கள். இங்கே அதை செய்தால் எங்கே மோடிக்கு விளம்பரம் ஆகி விடும்; செல்வாக்குப் பெருகி விடும் என்று எதிர் கட்சியினர், நம் அரசியல் எடுபடாது என நினைக்கிறார்கள். ஆனால் கோவை தெற்குத் தொகுதியில் வானதி அக்கா அதை நன்றாக செய்து வருகிறார். மக்களிடம் கனிவாக பேசி குறைகளை கேட்கிறார். அதன் வெளிப்பாடு இந்த தெற்குத் தொகுதியில் உள்ள வார்டுகளில் பெரும்பான்மையாய் நாங்கள் ஜெயிப்போம் என நம்புகிறேன்.
கேள்வி: உங்கள் வார்டில் பிரதான பிரச்சனைகள் பற்றி?
பதில்: பெரிய குறையே பார்க்கிங்தான். ஆக்கிர மிப்புகளை அகற்றினாலே இந்த பிரச்சனை சீராகி பார்க்கிங்கிற்கு வசதி ஏறுப்பட்டு விடும்.

scroll to top