ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு செய்வதற்காக ரயிலில் நகைகள் கடத்தல்

images.jpeg-117.jpg

கோவையிலிருந்து சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ஈரோடு ரயில் நிலையம் வந்தது. அப்போது அந்த ரயிலில் கோவை செல்வபுரம் சரோஜினி நகரைச் சேர்ந்த அழகிரி என்பவர் பயணம் செய்தார். அவர் வைத்திருந்த பையை சேலம் ரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் அணில் குமார் ரெட்டி சந்தேகத்தின் பெயரில் சோதனை செய்தபோது,
அதில் கணக்கில் வராத 3.900 கிராம் எடையுள்ள தங்கநகை பிடிபட்டது. இந்த தங்க நகைகளை கோவையிலிருந்து சென்னைக்கு விற்பனைக்கு கொண்டு செல்வது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, சேலம் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்) அதிகாரிகள் அவரை கைது செய்தனர். மேலும் அந்த தங்கத்தின் மொத்த மதிப்பு 1 கோடியே 78 லட்சத்து 56 ஆயிரத்து 200 ரூபாய் ஆகும். அவர் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த மதிப்பு ரூபாய் 10 லட்சத்து 70 ஆயிரத்து 852 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து இவர் சேலம் வரி விதிப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

scroll to top