ஜிகேவாசனுக்கு கொரோனா

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்  ஜி கே வாசனுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதுகுறித்து ஜிகே வாசன் கூறியதாவது, எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொண்டேன். பரிசோதனையின் முடிவில் எனக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது தெரியவந்தது. எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி நோய்த்தொற்றில் இருந்து குணமாகும் வரை நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொள்கிறேன்” என்று அறிவித்துள்ளார்.

scroll to top