ஜப்பானிய மொழியில் கார்த்தியின் ‘கைதி’

கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் ஜாப்பானிய மொழியில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘கைதி’ திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. ஹீரோயின், பாடல்கள், நடனம் என வழக்கமான தமிழ் சினிமாபோல் இல்லாமல் புதுமையாக எடுக்கப்பட்ட கைதி படத்திற்கு ரசிகர்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் நரேன், தீனா, அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியான் போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர்.
கைதி படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியால் பல மொழிகளிலும் தற்போது அந்தப் படம் ரீமேக் ஆகி வருகிறது. மேலும் கைதி திரைப்படம் பல விருதுகளையும் குவித்தது. இந்நிலையில் கைதி திரைப்படம் ஜாப்பானிய மொழியில் வெளியாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்கள் பாகுபலி உள்ளிட்ட சில இந்திய படங்கள் மட்டுமே ஜப்பானிய மொழியில் வெளியாகியுள்ளன. ரஜினியின் படங்களுக்கு ஜப்பான் மொழியில் நல்ல வரவேற்பு உண்டு. அந்த வரிசையில் தற்போது கார்த்தியும் ஜப்பானிய ரசிகர்களை கவரத் தயாராகிவிட்டார். கார்த்தியின் கைதி திரைப்படம் ஜப்பானிய மொழியில் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 19ஆம் தேதி முதல் கைதி திரைப்படம் ஜப்பானிய தியேட்டர்களில் வெளியாக உள்ளது. அந்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

scroll to top