கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் நேற்று தலைவர் மற்றும் துணை தலைவருகான மறைமுக தேர்தல், நடைபெற்றது. இந்த மறைமுக தேர்தலின்போது திமுக அதிமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இந்நிலையில் மதியம் நடைபெற்ற மறைமுக தேர்தலின் போதும் திமுகவினர் மறைமுக தேர்தல் நடக்க கொடுக்கப்பட்ட வாக்கு சீட்டினை கிழித்து எறிந்தனர் இதனையடுத்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.பின்னர் அதிமுகவை சேர்ந்த மருதாசலம் தலைவராகவும் கணேஷ் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் வன்முறைக்கு காரணமானவர்கள் என தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மருதாசலத்தின் மகன் உட்பட 9 பேரை போத்தனூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இதனை கண்டித்து தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை வன்முறைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் பிரிவினர் எம்.எல்.ஏ தாமோதரன் தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். பின்னர் அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினர் இன்பதுரை செய்தியாளர்களிடம் பேசுகையில் நேற்று வெள்ளலூர் பேரூராட்சியின் மறைமுக தேர்தலில் திமுகவினரால் வன்முறை நிகழ்த்தப்பட்டது. ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டும் தேவையான போலீஸ் பாதுகாப்பு போடவில்லை. குணசேகரி என்ற திமுக பெண் கவுன்சிலர் வாக்குசீட்டை கிழித்தெரிகிறார். கரூரில் இருந்து 100 வாகனத்தில் பலர் இங்கு வந்துள்ளனர். காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்கவில்லை. தேர்தலை சீர்குலைத்த நபர்கள் மீது வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளது. ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்படவில்லை. தமிழ்நாட்டில் கோவையை முதல்வருக்கு பிடிக்கவில்லை. எனவே தான் இங்கு வன்முறை கட்ட அவிழ்த்தப்பட்டுள்ளது. யார் இந்த அறப்போர் இயக்கம் என்று தெரியவில்லை. தேவையில்லாமல் முன்னாள் அமைச்சர் வேலுமணி மீது தேவையில்லாத குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள். திமுகவின் பி – டீம் இந்த அறப்போர் இயக்கம். திமுகவுக்கு எப்போது சரிவு ஏற்படுகிறதோ. அப்போதெல்லாம் இந்த அறப்போர் இயக்கம் செய்தியாளர் சந்திப்பு நடத்துகிறார்கள். பொங்கல் தொகுப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக சொல்கிறது. அதைப்பற்றி எந்த வழக்கு இந்த அறப்போர் இயக்கம் தொடுக்கவில்லை. வெள்ளலூர் பேரூராட்சியில் அதிமுகவின் வெற்றியை மறைப்பதற்காகவும் , முதல்வரின் துபாய் பயணம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கொடுத்த செய்தியாளர் சந்திப்பு பேட்டியையும் மழுங்க அடிப்பதற்காகவும் இந்த அறப்போர் இயக்கம் செய்தியாளர் சந்திப்பு நடத்துகிறார்கள். நேற்று வெள்ளலூர் பேரூராட்சியில் மறைமுக தேர்தலில் நடந்த வன்முறை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம். இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.
ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்படவில்லை. அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினர் இன்பதுரை பேட்டி
