சோழவந்தான் பேரூராட்சி தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய பாஜகவினர்

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் பாஜக போட்டியிட உள்ளது .
இதற்கான வேட்பாளர் அறிமுகம் விழா நடைபெற்றது. சோழவந்தான்
ஜெனகை நாராயணபெருமாள் கோவில், வளாகத்தில் நடந்த அறிமுக விழாவிற்கு ஒன்றியத் தலைவர் முருகேஸ்வரி தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் கோவிந்த மூர்த்தி, நிர்வாகிகள் மாயாண்டி, முருகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாஜக மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன் 18-வார்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரசாரத்தை தொடங்கினார். வேளாளர் தெரு, பத்ரகாளியம்மன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் வெற்றிலை பாக்கு வைத்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். மலைச்சாமி, தமிழரசி, முத்துமணி, சுகந்திரம், அமுதா, அழகர் ,ரமேஷ், செல்வி ராணி, கல்யாணி, முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

scroll to top