சோழவந்தான் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பயிற்சி

WhatsApp-Image-2023-03-18-at-5.54.43-PM.jpeg

சோழவந்தானில், விருதுநகர் மாவட்டடத்தைச் சேர்ந்த பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் திடக்கழிவு மேலாண்மை குறித்த கள பயிற்சியில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை பயிற்சிக்காக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பேரூராட்சிகளான மல்லாங்கிணறு, மம்சாபுரம், வத்திராயிருப்பு உள்ளிட்ட பல்வேறு பேரூராட்சிகளை சேர்ந்த செயல் அலுவலர்கள் துப்புரவு மேற்பார்வையாளர்கள் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

சோழவந்தான் பேரூராட்சியில், உள்ள 18 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என, பிரித்து திடக்கழிவு செய்யும் முறையையும், மக்கும் குப்பைகளை உரமாக மாற்றுவது குறித்த பயிற்சியும் மேற்கொண்டனர். மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் எஸ். சேதுராமன், செயல் அலுவலர், பேரூராட்சி தலைவர் ஜெயராமன், துணைத் தலைவர் லதா கண்ணன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் ,சுகாதார ஆய்வாளர் முருகானந்தம், சுகாதார மேற்பார்வையாளர்கள், துப்புரவு பணியாளர்கள் அலுவலக பணியாளர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

scroll to top