சோழவந்தான் திரௌபதை அம்மன் கோவில் பூக்குழிதிருவிழா முர்த்தக்கால் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு திரௌபதை அம்மன் கோவில் பூக்குழி திருவிழா வருகிற 24ஆம் தேதி தொடங்கி, மே ஐந்தாம் தேதி முடிய நடைபெற உள்ளது.
இதற்கான மூர்த்தக்கால் நடுவிழா வானது, கோவில் முன்பாக நடந்தது. விழாவை முன்னிட்டு, கோவிலில் இருந்து மூர்த்தக்கால் கம்பம் மேளதாளத்துடன் எடுத்து வந்து கோவில் முன்பாக உள்ள மெயின் ரோட்டில் பூஜைகள் செய்து திருவிழா மூர்த்தக்கால் கம்பம் ஊன்றினார்கள். தொடர்ந்து, அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், பரம்பரை அறங்காவலர்கள், செயல்அலுவலர், கோவில் பணியாளர்கள் மற்றும் உபயதார்கள் கலந்து கொண்டனர்.