சோழவந்தான் ஜெனகை பெருமாள் சித்திரை திருவிழாவையொட்டி நடைபெற்ற தசாவதார நிகழ்ச்சி

IMG-20220418-WA0003.jpg

மதுரை அருகே சோழவந்தான் ஜெனகை நாராயணபெருமாள், கள்ளழகர் திருக்கோலத்தில் வைகை ஆற்றில் இறங்கினார். அதைத்தொடர்ந்து, கருடவாகனத்தில் சோழவந்தான் நகரில் பல்வேறு மண்டகப்படிகளில் பக்தர் காட்சியளித்தார். இதைத்தொடர்ந்து, யாதவர்கள் மண்டகப்படி சார்பில், சோழவந்தான் சந்தான கோபால சுவாமி திருக்கோவிலில், தசாவதார நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பெருமாள், மச்சாவதாரம், கூர்மாவதாரம், ராம அவதாரம் ,கிருஷ்ண அவதாரம் ,மோகினி அலங்காரங்களில் பக்தருக்கு காட்சியளித்தார்.
இதை க்கண்டு தரிசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

scroll to top