சோழவந்தான் சித்திரை திருவிழாவில் தேமுதிக வடக்கு மாவட்டம் சார்பாக நீர் மோர் பந்தல் திறந்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்றது. இதில் மதுரை வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் ஓட்ட புள்ள கோவிலில் நீர்மோர் பந்தல் திறந்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. வடக்கு மாவட்ட துணை செயலாளர் தங்கராஜ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் முத்துப்பாண்டி, தேவேந்திரன் முன்னிலை வகித்தனர். பேரூர் செயலாளர் கிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார். இதில் நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர் நல். கர்ணன், அவைத் தலைவர் ஜெயவீரன், அம்பலம் ,கண்ணம்மா ,சுப்புலட்சுமி, டேனியல் ,நிர்மலா, அழகர், சந்தனகருப்பு, உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.