சோழவந்தான் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

WhatsApp-Image-2023-03-18-at-5.54.37-PM.jpeg

மதுரை மாவட்டம், சோழவந்தான் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. 2022_23 ஆம் ஆண்டிற்கான கல்வி ஆண்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவியருக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

பள்ளித்தாளாளர் பென்சாம், முதல்வர் கலைவாணி, உறவின்முறைத் தலைவர் சிவபாலன் ஏற்பாடுகளை செய்து இருந்தனர். மாணவ, மாணவியர், தொழில்துறை, விவசாயம், தமிழ் ஆளுமை, பாரம்பரிய நாட்டுப்புற கலைகள், விண்வெளி துறை உள்ளிட்ட பல்வேறு கலை அறிவியல் பொருள்களை கண்காட்சியில் வைத்திருந்தனர். ஆர்வமுடன் கேட்ட பெற்றோர்களுக்கு, மாணவ மாணவிகள் அதனை விளக்கிக் கூறினர். இந்த கண்காட்சியில், சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பள்ளி மாணவ மாணவியர் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் , உறவின்முறை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

scroll to top