சோழவந்தான் உழவன் உணவகத்தில் இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் உழவன் உணவகத்தில், இந்திய குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. முள்ளிப்பள்ளம் ஊராட்சி முன்னாள் தலைவர் மார் நாட்டான் தலைமை வகித்தார். உழவன் உணவகம் அமைப்பாளர் போதுமணி முன்னிலை வகித்தார். பேராசிரியர் பழனிச்சாமி கொடியேற்றினார். ஐக்கிய விவசாய சங்க மாநிலச் செயலாளர் சேது இனிப்புகள் வழங்கினார். இதில், காங்கிரஸ் பிரமுகர்கள் பழனி, பரமசிவம், முத்துப்பாண்டி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

scroll to top