மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி தலைமையில் ஊராட்சிமன்றத் துணைத் தலைவரும் முள்ளிப்பள்ளம் திமுக கிளைச் செயலாளருமான கேபிள்ராஜா முன்னிலையில் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், மாவட்ட மகளிரணி சந்தான லட்சுமி, ஊராட்சி கவுன்சிலர்கள், முள்ளை சக்தி பாண்டியம்மாள் செல்லமுத்து, முனீஸ்வரி, சித்ரா இளங்கோவன் சரஸ்வதி வண்டிக்கார ராசு கார்த்திகேயன் ஊராட்சி செயலர் மனோ உட்பட கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர். அனைவரும் முக கவசம் அணிந்து புகையில்லா சமத்துவ பொங்கல் கொண்டாடும்படி ஆலோசனை வழங்கப்பட்டது.