சோழவந்தான் அருகே பலத்த மழை: குடியிருப்புக்குள் புகுந்த மழை நீர் பொதுமக்கள் அவதி

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்ததால், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். கால்வாய் வசதி இல்லாததாலும், ஊராட்சி நிர்வாகத்தினர் பணிகளை செய்யாததாலும், மிகவும் சிரமப்படுவதாக மழை நீர் புகுந்ததால் பூச்சிகள் மற்றும் விஷ ஜந்துக்கள் வருவதாலும் ஒருவித அச்சத்துடன் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஆகையால், சம்பந்தப்பட்ட காடுபட்டி ஊராட்சி நிர்வாகம் உடனடியாக மழை நீரை வெளியேற்றி பொதுமக்களை பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக்
கொண்டுள்ளனர். மேலும், கால்வாய் வெட்டும் பணிக்காக தோண்டிய மூடாமல் இருப்பதால், தண்ணீர் வெளியேற வசதி இல்லாததாலும், மழை பெய்தவுடன் வீட்டுக்குள் தண்ணீர் வந்துவிடுவதாக கூறுகின்றனர். ஆகையால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டு தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

scroll to top