சோழவந்தானில் முன்னறிவிப்பின்றி மின்தடை: பொதுமக்கள் அவதி

சோழவந்தான் நகர் முழுவதும், காலை 10 மணி முதல் மின்சார தடையால் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். இரவு 7 மணி வரை மின்சாரம் தடையால் கைக்குழந்தை வைத்திருப்போர் உடல் நலிவுற்று இருப்போர் மிகுந்த அவதியுற்று வருகின்றனர். மதிய நேரத்தில் ஆன்லைன் வகுப்பில் மாணவர்கள் பங்கேற்று இருக்க கூடிய சூழ்நிலையில் மின்சாரம் இல்லாமல் சிரமப்பட்டனர். மாலை மருத்துவமனைகள் மருந்தகங்கள் இன்வெர்ட்டர் மூலம் சேகரித்து வைத்திருந்த அனைத்து மின்சாரமும் காலியாய் போன பின் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

scroll to top