சோழவந்தானில் தமிழக காவல்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு முகாம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் எம் வி எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான போதை தடுப்பு ,பாலியல் குற்றங்களுக்கான விழிப்புணர்வு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின்பேரில் ,சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலன் அவர்களின் ஆணைக்கிணங்க ,சார்பு ஆய்வாளர் ராஜேந்திரன் ஆலோசனையின்படி ,தலைமை காவலர் ராஜா பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் தடுப்பு ,பாலியல் குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வினை வழங்கினார்.

அவர் கூறும்போது பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் வீட்டிலிருந்து வரும் போதும் தனியே விட்டிற்கு செல்லும் போதும் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் முக்கியமாக மாணவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகி விடக்கூடாது உள்ளிட்ட ஆலோசனைகள் வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் டாக்டர் லயன் எம் வி எம் மருது பாண்டியன் தலைமை வகித்தார் . பள்ளி நிர்வாகிகள் எம். மணி முத்தையா, எம்.வள்ளிமயில் ஆலோசனை வழங்கினார். பள்ளி முதல்வர் தீபா ராகினி வரவேற்றார். இதில் மாணவ மாணவியர் அவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.

scroll to top