மதுரை மாவட்டம், சோழவந்தானில் ரயில்வே மேம்பால பணிகள் மற்றும் புதிய பேருந்து நிலைய பணிகளின் தாமதத்தால், சோழவந்தான் அரசு பணிமனையில் இருந்து செல்லும் பேருந்துகள் குறிப்பிட்ட காலத்திற்குள் செல்ல முடியாததால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதன் ஒரு சம்பவமாக இரவு சுமார் 9 மணி அளவில் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து கருப்பட்டி கிராமத்திற்கு சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த கருப்பட்டிக்கு செல்ல வேண்டிய 63ஆம் நம்பர் பேருந்து அடுத்த ட்ரிப்புக்கு நேரம் ஆகிவிட்டதாக கூறி, சோழவந்தான் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் கருப்பட்டி, இரும்பாடி
செல்லும் பயணிகளை இறக்கி விட்டதால், பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனரிடம் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .
இது சம்பந்தமாக, அரசு போக்குவரத்துக் கழக மேலாளரை தொடர்பு கொண்டால் போனை எடுக்கவில்லை என்றும்,
ஒன்பது மணிக்கு நடுவழியில் இறக்கி விட்டதால், சுமார் 30க்கும் மேற்பட்ட பயணிகள் சுமார் 10 கிலோமீட்டர் தூரமுள்ள கருப்பட்டி இரும்பாடி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தது பொதுமக்களிடையே மிகுந்த எரிச்சலை உண்டாக்கியது.
மேலும்,
தொடர்ச்சியாக போக்குவரத்துக் கழகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை பேருந்துகளின் பற்றாக்குறையால் ,
பல இன்னல்களை அனுபவித்து வரும் பொதுமக்கள் இரவு நேர பேருந்தில் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் ,
அடுத்த 24 மணி நேரத்தில் பிரச்சனையை சரிசெய்யா விட்டால் கிராம மக்களை ஒன்று திரட்டி சோழவந்தானில் உள்ள அரசு போக்குவரத்துகழக பணிமனையை முற்றுகை யிடப் போவதாகவும், அங்கு இருக்கும் பேருந்துகளை வெளியே விட அனுமதிக்க மாட்டோம் என்றும் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.
மேலும், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் முறையிட்டாலும் ,
உரிய பதில் அளிக்க மறுப்பதாகவும் மெசேஜில் பதில் சொல்கிறோம் என்று ஆணவ போக்குடன் பதில் சொல்வதாகவும், இதனால், பொதுமக்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் ,தமிழக அரசும் போக்குவரத்து துறையும் பொதுமக்களின் பிரச்சனையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும், இல்லையென்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கின்றனர்.
சோழவந்தானில் பயணிகளை பாதி வழியில் இறக்கி விட்ட ஓட்டுநரின் செயலால் பொதுமக்கள் அவதி
