சோழவந்தானில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் ஏற்பு, தேர்தல் அலுவலர் தகவல்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது, அரசியல் கட்சியினர் சுயேச்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் இன்று பேரூராட்சி அலுவலகத்தில் வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது, அரசியல் கட்சிகளின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மற்றும் சுயேச்சையாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு மொத்தமுள்ள 98 மனுக்களும் ஏற்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.

scroll to top