மதுரை மாவட்டம், சோழவந்தானில், உள்ள காமராஜர் நடுநிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், கிசா மகேஷ், மனோஜ்பாண்டி, அருண் கோபி, சேக்பரித் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் ஜெயராமன் குத்துவிளக்கேற்றி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். பேரூராட்சி துணைத் தலைவர் மற்றும்செயல் அலுவலர் சுதர்சன் சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர். மருத்துவ முகாமில், கர்ப்பிணி பெண்களுக்கு ரத்த அழுத்தம் எடை பார்த்தல் குழந்தைகள் பராமரித்தல்உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினர். சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த அழுத்தம் சர்க்கரையின் அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது. கண் பரிசோதனை, காது மூக்கு தொண்டை பரிசோதனை,
பிறவி மற்றும் வளர்ச்சி குறைபாடு பல் மருத்துவம்உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சோதனைகள் செய்யப்பட்டது.
மேலகால், கச்சை கட்டி, மன்னாடி மங்கலம், சித்தாலங்குடி ஆகியவற்றின்
ஆரம்ப சுகாதார நிலையம் செவிலியர்கள் மருத்துவ உதவியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மருத்துவ முகாமில், சோழவந்தான் பேரூராட்சி உட்பட்ட 18 வார்டுகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் அருகிலுள்ள கிராமத்தில் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமான கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
சோழவந்தானில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
