சோழவந்தானில் இலவச கண் பரிசோதனை முகாம்

WhatsApp-Image-2023-04-16-at-13.41.29.jpg

சோழவந்தானில், சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், சோழவந்தானில் உள்ள சி.எஸ்.ஐ. பள்ளியில், சோழவந்தான் 24 மனை தெலுங்கு செட்டியார் உறவின்முறை, மதுரை தங்கமயில் ஜுவல்லரி ,மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து சர்க்கரை நோயாளிகளுக்கானஇலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
இதில், சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மருத்துவர்கள் தோஷித் வார்சேனை, விக்னேஷ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதில், சோழவந்தான் 24 மனை தெலுங்கு செட்டியார் உறவின்முறை தலைவர் மாரியப்பன், செயலாளர் பொன்னையன், பொருளாளர் முருகேசன், செவிலியர்கள் மருத்துவமனை அலுவலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் ஒருங்கிணைத்தார்.

scroll to top