தமிழகத்தில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சொத்து வரி உயர்ந்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எதிர்கட்சி கொரோடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார் ,அம்மன் கே. அர்ஜுனன், ஏ.கே.செல்வராஜ் , வி.பி.கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம் உட்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
”சொத்து வரி உயர்த்தியதை ரத்து செய்யும் வரை அதிமுக தொடர்ந்து போராடும்” எஸ்.பி.வேலுமணி
