1908-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி இங்கிலாந்தின் போக்ஸ்டன் நகரில் முதல் அழகிப் போட்டி நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் நடந்த அழகிப்போட்டிகள் ஆச்சரியமாக பார்க்கப்பட்டு, பலரை கவர்கின்ற போட்டியாக மாறியது. இன்று உலகின் எல்லா நாடுகளிலும் அழகிப் போட்டிகள் நடத்தப்படுகிறது 1994-ம் ஆண்டு சுஷ்மிதா சென் இந்தியாவின் முதல் அழகி பட்டத்தைப் பெற்றார். தொடர்ந்து பலரும் உலக அழகிகளாக தேர்ந்தெ டுக்கப்பட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் அண் மையில் மும்பையில் மிஸஸ் ஏசியா நிறுவனம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை கவுண்டம்பாளைய த்தைச் சேர்ந்த சோனாலி கே.பிரதீப், “மிஸஸ் ஏசியா குயின்” — 2021 பட்டம் வென்றுள்ளார் . குஜராத் மாநிலம் கட்ச் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட சோனா லியின் குடும்பம் பல தலைமுறைகளுக்கு முன்பு கோவைக்கு குடி பெயர்ந்துள்ளனர். பள்ளி ,கல்லூரி படிப்பினை கோவையில் முடித்த சோனாலி, முதுகலை படிப்பினை டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்துள்ளார். படிக்கும்போதே எல்லா மாணவர்களைப் போலவே பள்ளி கல்லூரிகளில் நடக்கும் விழாக்களில் நடனம்,ஆடை அலங்கார அணிவகுப்பு ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று உள்ளார். பின்பு பிரதீப் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு,இல்லற வாழ்க்கையிலே நடத்திக் கொண்டிருந்தார்.அந்தக் காலகட்டத்தில் உடல் எடை அதிகம் ஆனதால் சில உடல் உபாதைகளும் ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்க்க உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்க வழக்கங்களை சரியான முறையில் கையாண்டு தமது உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வந்தார். இதனைக் கண்ட அவரது நண்பர்கள் அவரை வியந்து பார்த்தனர்.கராத்தே வீரரான கணவர் பிரதீப்பும் அவருக்கு உரிய ஆலோசனை கொடுத்தார்.
உடல் எடை குறைந்ததால் மறுபிறவி எடுத்து உள்ளது போன்ற உணர்வை ஏற்படுத்திய சோனாலிக்கு, புதிய சிந்தனைகள் ஏற்பட்டது. மேலும் நண்பர்கள் அழகிப்போட்டி உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்க ஆலோசனை கூறினர். அதன்பேரில் 2015 இல் கோவையில் நடைபெற்ற அழகிப் போட்டியில் கலந்து கொண்டார். நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இப்போட்டியில் சோனாலி “மிஸஸ் கோயம்புத்தூர் பட்டம் “வென்றார். இந்தப் படத்தின் மூலம் புதிய உத்வேகம் பெற்ற சோனாலி, இதுபோல பல மேடைகளில் ஏற வேண்டும் என முடிவு செய்து அதற்கு ஏற்ப தமது செயல்பாடுகளை மேற்கொண்டார். இதன் பலனாக 2017 -ல் புனேயில் நடைபெற்ற தேசிய அளவிலான அழகி போட்டியில் “மிஸஸ் இந்தியா தமிழ்நாடு “பட்டம் வென்றார். 3,500 பேர் விண்ணப்பம் செய்ததில் நாற்பத்தி ஏழு பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டனர். இதில் சோனாலியின் அறிவு திறமை, மற்றவர்களிடம் நட்பு பாராட்டும் தன்மை,ஆடை அணிந்த விதம் ,உடல் தோற்றம் உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில் இவர் தேர்வு செய்யப்பட்டார்.தமிழ், ஹட்சி, குஜராத்தி, மலையாளம் ,இந்தி, தெலுங்கு,ஆங்கிலம் ஆகிய மொழிகள் தெரிந்துள்ள சோனாலி ,போட்டிகளில் நடுவர்கள் எந்த மொழியில் கேட்டாலும் தனது அறிவார்ந்த பதி லால் தேர்வில் எளிதாக வென்றார்.இவரைப் பற்றி கேள்வியுற்ற பல கல்லூரி, பள்ளி,தனியார் மருத்துவமனை நிறுவனங்கள் இவரை அழைத்து தன்னம்பிக்கை மற்றும் திறன் மேம்பாட்டு குறித்த பயிற்சிகளை அளிக்க கேட்டுக்கொண்டனர். கோவையின் பிரபல கல்லூரிகளிலும் இவர் பயிற்சி வகுப்புகளை எடுத்துள்ளார். கோவை, ஈரோடு ,கேரளா உள்ளிட்ட பல கல்லூரிகள் மருத்து வமனைகளிலும் இவரது பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து சோனாலி கூறும்போது, “சாதாரண மாணவ மாணவர்கள் 90,95 மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், தன்னம்பிக்கை ஊட்டுவதன் மூலம் அவர்கள் வாழ்வில் எதையும் சாதிக்க முடியும் என்ற எண்ணம் அவர்கள் மனதில் மேலோங்குகிறது. இதனால் அவர்களின் எதிர்கால வாழ்வு மிகவும் பிரகாசமாகிறது. லட்சியம் உருவாகி, எதிர்காலத்தில் தான் இந்த துறைக்குத் தான் செல்ல வேண்டும் என அவன் பயணித்து தனது வெற்றியை எளிதாக்கி கொள்ளலாம். மேலும் ஒருவரின் திறனை அறிந்து அவர்களுக்கு அதற்கு ஏற்ற பயிற்சி அளித்தால் அவர்கள் வாழ்வில் உயர்நிலையை அடைவர். இதுபோன்ற பயிற்சி பட்டறைகள் மூலம் பல மாணவர்கள் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி உள்ளேன்” என பெருமிதத்துடன் கூறினார் .தொடர்ந்து 2019ஆம் ஆண்டு மொரீசியசில் நடைபெற்ற போட்டியில் “மிஸஸ் இந்தியா earth ” பட்டத்தை வாகை சூடினார். தொடர்ந்து சமுதாய, சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சோனாலி ,கடந்த ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ் பி வேலுமணியின் அறிமுகத்தின் மூலம் அரசியலுக்குள் நுழைந்தார் .அதிமுகவில் சேர்ந்து பல பணிகளை செய்தார். தற்போது இவர் கோவை வடக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளராக உள்ளார்.மேலும் ஆர்.எஸ் .புரம் லேடிஸ் கிளப் மற்றும் ரோட்டரி சங்கம் ஆகியவற்றின் மூலம் சமுதாய சேவையினை செய்து வருகிறார்.ரோட்டரி சங்கத்தில் பொது நிகழ்வுகளின் தலைவராக உள்ளார். இவரது சேவையை பாராட்டி பல்வேறு அமைப்புகள் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன.”இந்த விருதுகள் தான், தான் பெற்ற பெரும் பேறு எனவும் ,பெற்ற விருதுகளால் பொறுப்பும் ,கடமையும் அதிகரித்துள்ளது “எனவும் கூறுகிறார் மேலும் சோனாலி கூறும்போது, அம்மா சேரிட் டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவராக உள்ளேன். பெண்களின் வாழ்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது தான் எனது லட்சியம். இதற்காக தொழில் மையம் ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். இதில் கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் .பெண் குழந்தைகளுக்கான கல்வி, அவர்களின் வாழ்க்கை முன்னேற்றம் ஆகியவற்றிலும் இந்த அறக்கட்டளை மூலம் உதவி செய்து வருகிறோம். கொரனோ காலகட்டத்தில் மலைவாழ் பகுதிகளுக்கு சென்று மிகப்பெரிய சேவை செய்தோம். தொடர்ந்து மக்களோடு மக்களாக நின்று, களப்பணி ஆற்றவதே எனது சேவையாக இருக்கும் என உறுதியுடன் கூறினார்.
சேவையே வாழ்வு,அதுவே பெண்களின் உயர்வு: மிஸஸ் ஏசியா குயினின் தாகம்
