சேவைக்கு பத்மஸ்ரீ விருது சாந்தி கியர்ஸ் நிறுவனர் சுப்ரமணியம்

2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 119 பேருக்கு வழங்கப்பட்டது. இதில் 7 பேருக்கு பத்ம விபூ‌ஷன் விருதும், 10 பேருக்கு பத்மபூ‌ஷன் விருதும், 102 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைப்பெற்றது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்துக் கொண்டனர். இதில் மறைந்த கோவை சாந்தி கியர்ஸ்ர்ஸ் நிறுவனத் தலைவர் சுப்ரமணியம் அவர்கர்ளுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அவரின் சார்பாக அவரது மகள் சபிதா பெற்றுக்கொண்டார்.
கோவை சாந்தி கியர்ஸ் முன்னாள் இயக்குனரும், சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர் சுப்பிரமணியம் (78). தனியார் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர்,
1972ம் ஆண்டு ஒரு லேத் இயந்திரத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்டு கியர் வீல்கள் தயாரிக்க ஆரம்பித்தார். ஆரம்பக் கால கட்டத்தில் ஜவுளி இயந்திரங்களுக்கு உதிரிப்பாகங்கள் தயாரித்தவர். பின்னர், தொழிலை விரிவாக்கம் செய்த அவர், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதியில் ஈடுபட்டார். இஸ்ரோ நிறுவனத்திற்கும் இவரது தயாரிப்புகள் கொடுக்கப்பட்டன. கடந்த சில வருடங்களுக்கு முன் தனியார் நிறுவனம் ஒன்றுக்குச் சாந்தி கியர்ஸ் விற்கப்பட்ட நிலையில், பொதுமக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 1996 ம் ஆண்டு சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற அமைப்பினை சுப்பிரமணியம் துவங்கி, அந்த அமைப்பின் அறங்காவலராகச் சுப்பிரமணியம் இருந்து வந்தார். இந்த அமைப்பின் மூலம் உணவகம், மருத்துவமனை, மருந்தகம் போன்றவற்றைக் கடந்த 24 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.சிங்காநல்லூர் பகுதியில் இயங்கி வரும் சாந்தி சோசியல் சர்வீஸ் மேலும், 30 ரூபாயில் மதிய உணவு, குறைந்த விலையில் காலை சிற்றுண்டி இங்கு வழங்கப்படும் மேலும், அங்கு உள்ள மருத்துவமனையில் மருந்துகளில் 30% தள்ளுபடி, குறைந்த பணத்தில் பரிசோதனை என பல்வேறு சலுகைகைகள் உள்ளது.
சாந்தி சோசியல் சர்வீஸ் ஹோட்டல் ஏழைகளின் நலனுக்காகவே 20 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. அங்கு பாரபட்சமின்றி அனைவருக்கும் சிறந்த தரமான உணவு வழங்கப்படுகிறது.
கோவையில் அதிக விற்பனை மற்றும் தரம் நிறைந்த எரிபொருள் விநியோகிக்கும் பெட்ரோல் பங்க். இதன் சிறப்பு, எவ்வளவு பெட்ரோல் அல்லது டீசல் விலை ஏற்றம் இருப்பினும், முற்றும் முழுதாக அவை இங்கே தீரும் வரை பழைய விலை தான்.24 மணி நேரமும் செயல்படும் மருந்தகம். விஸிறி லிருந்து 20 சதவிகிதம் தள்ளுபடி இங்கு கிடைக்கிறது. விற்பனை விலை மீதான கட்டணம் அறக்கட்டளையால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது, 15 முதல் 20 கிலோமீட்டருக்கு குறைவான தூரத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச டோர் டெலிவரி. மேலும் சாந்தி மருத்துவக ஆய்வகத்தில் அமைந்திருக்கும் ஆய்வகத்தில் ஸ்கேன், எக்ஸ்ரே, உள்ளிட்ட டெஸ்டுகளுக்கு 50 இல் இருந்து 70 சதவிகிதம் வரை விலை குறைவு.சாந்தி மருத்துவமனை -மருத்துவருக்கான கட்டணம் 30 ரூபாய். டயாலிசிஸ் செய்து கொள்ள குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் ஒரு நாளைக்கு 10,000 பேர் தற்போது உபயோகிக்கும் உணவகம், ரேடியாலஜி சென்டர், ஏழை மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி, அரசுப் பள்ளிகளில் புதிய கட்டிடங்கள் கட்டிக் கொடுத்தல், ஆசிரியர்கள் குறைவாக உள்ள பள்ளிகளுக்கு தன் செலவில் ஆசிரியர்களை பணியில் அமர்த்தல் என்று எண்ணற்ற சேவைகளைச் செய்து வரும் சாந்தி சோஷியல் சர்வீசஸ் அறக்கட்டளை.

scroll to top