கோவை திராவிட முன்னேற்றக் கழக கோவை மேற்கு மாவட்டம் சார்பில், 22வார்டில் கழக தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 4ம்ஆண்டு நினைவஞ்சலி கூட்டம் சேரன் மாநகர் முதல் பேருந்து நிறுத்தம் மற்றும் 4வது பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் நடைபெற்றது.

கோவை மேற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் திரு த.பிரபாகரன் அவர்கள் தலைமை வகித்து தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் சாதனைகள் மற்றும் கட்சிக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் அவர்பட்ட துயரங்கள் குறித்தும் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.