சென்னை மாநகராட்சி கவுன்சில் மண்டபம் புதுப்பிக்கும் பணி

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி கவுன்சில் மண்டபம் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சி தேர்தல் பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது. பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங்கில் உள்ள மேயர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் அமர்ந்து விவாதிக்கும் கவுன்சில் மண்டபம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத நிலையில், பயன்படுத்தப்படாமல் இருந்த கவுன்சில் மண்டபம், அதனுள் உள்ள மேயர் நாற்காலி மற்றும் வார்டு மெம்பர்களுக்கான இருக்கைகள் சரி செய்யும் பணியுடன் புதுப்பிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த கவுன்சில் மண்டபத்தில் 200 கவுன்சிலர்கள், நான்கு டிசிக்கள், ஒரு கமிஷனர், துணை மேயர் மற்றும் மேயர் ஆகியோர் அமரும் வகையில் உள்ளது. கவுன்சிலின் . இடதுபுறத்தில் பத்திரிகையாளர்களுக்கான பால்கனி உள்ளது. இந்த அறை முழுமையாக தற்போது புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

scroll to top