சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

VANDE-BHARAT.jpg

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகலில் சென்னை வந்தடைந்தார். நண்பகல் 2.45 மணி அளவில் ஐதராபாத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பிரதமரை நேரில் வரவேற்றனர். பின்னர், ரூ.2,467 கோடி மதிப்பில் சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புதிய விமான நிலைய முனையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார் பிரதமர் மோடி.

அதனைத்தொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த பிரதமர் மோடி அங்கு சென்னையிலிருந்து கோவை செல்லும் வந்தே பாரத் ரயிலை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

scroll to top