சென்னையில் 9 இடங்களில் புதிய மேம்பாலங்கள்

I-24_from_Silliman_Evans_looking_north_resized.jpg

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ஏற்கனவே 22 மேம்பாலங்கள் உள்ளன. தற்போது மேலும் 9 மேம்பாலங்களை அமைக்க தமிழகஅரசு திட்டமிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியுடன் இணைந்து ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பில் மேம்பாலங்கள் அமைப்பது தொடர்பாக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கட்டப்பட்டு வரும், வேளச்சேரி மற்றும் மேடவாக்கம் மேம்பாலங்கள் முடியும் தருவாயிலுள்ள நிலையில், மேலும் 6 பாலங்கள், மேம்பாலங்கள் மற்றும் கலங்கரை விளக்கம் முதல் கிண்டி வரை 4 வழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. சென்னை  தேனாம்பேட்டை- சைதாப்பேட்டை பஸ் நிலையம் வரை 3.5 கி.மீ. தூரத்திற்கு நான்கு வழிச்சாலை ரூ.322 கோடியில் அமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. தேனாம்பேட்டை- சைதாப்பேட்டை உயர்த்தப்பட்ட தாழ்வாரம் அண்ணா சாலையில் பயண நேரத்தை 30 நிமிடங்கள் குறைக்கும். இதனால் விமான நிலையத்திற்கான இணைப்பு மேம்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

scroll to top