மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம் பன்னியான் கிராமத்தில், கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகளின் உயிர் உரங்கள் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வேளாண்மை கல்லூரி மாணவிகள் ஜோதிகா, சுபலட்சுமி, காயத்ரி தேவி, ரோஷினி, பேராச்சி,கோமதி உள்ளிட்டோர் ஊரக வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின்கீழ் செக்கானூரணி அருகே உள்ள கிராமத்தில் விவசாயிகளுக்கு உயிர் உரங்கள் பற்றிய ஆலோசனைகளை வழங்கினர். செல்லம்பட்டி வட்டார உதவி தோட்டக்கலை அலுவலர் சிவகுமார் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இயற்கை விவசாயம், விதை நேர்த்தி, அதிக மகசூல், நோய் தாக்கம் குறைவு, உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு ஆலோசனை பெற்றனர்.