சூரிய கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி-யில் தரிசனம் ரத்து

Pi7_Image_tirupathi.jpg

அக்டோபர் 25-ம் தேதி சூரிய கிரகணம் மற்றும் நவம்பர் 8 சந்திர கிரகணம் ஆகியவற்றை முன்னிட்டு இவ்விரு நாட்களும் காலை முதல் இரவு வரை 12 மணி நேரம் கோயில் நடை சாத்தப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சூரிய கிரகணம் மாலை 5:11 தொடங்கி 6:27 வரை நீடிக்கும் என்பதால் 25ம் தேதி காலை 8:11 முதல் இரவு 7:30 வரை அனைத்து தரிசனமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சந்திர கிரகணம் நவம்பர் 8 ம் தேதி பிற்பகல் 2:39 முதல் மாலை 6:19 வரை நீடிக்கும் என்பதால் அன்று காலை 8:40 முதல் இரவு 7:20 வரை அனைத்து தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது.

scroll to top