சூரனூர் கைலாசநாதர் கோவில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

விருதுநகர் மாவட்டம், சூரனூர் கைலாசநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே சூரனூர் கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த ஆனந்தவள்ளி சமேத கைலாசநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது. இங்குள்ள காலபைரவர், பால பைரவர், சுவாமிக்கு 9 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்கார பூஜை செய்யப்பட்டது. அதன் பிறகு, மூலவருக்கும் ஆனந்தவள்ளி அம்மனுக்கும் பூஜை நடத்தப்பட்டது. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

scroll to top