சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரித்துறையினர் சோதனை

புரசைவாக்கம், தி.நகர்  உள்பட 4 பகுதிகளில் செயல்பட்டு வரும் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர் வரி செலுத்துவதில் முறைகேடு என்று சந்தேகித்தால் வருமான வரித்துறையினர் அந்த நிறுவனங்களுக்கு சென்று ஆய்வு செய்வது வழக்கம்;.சென்னையில் அமைந்துள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ்க்கு சொந்தமான புரசைவாக்கம், தி.நகர், போரூர், குரோம்பேட்டை   பகுதிகளில் அமைந்துள்ள கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.கணக்கில் வராத முதலீடு செய்துள்ளதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

scroll to top