சுவாமி சொரூபானந்தர் சித்தியடைந்தார்

மதுரை பேச்சியம்மன் படித்துறை சிவானந்த சத்சங் பவன் சுவாமி சொரூபானந்தர் இன்று காலை சித்தியடைந்தார். இவர் சிவானந்த ஆசிரமத்தில் சன்னியாசியாக தீட்சை பெற்றவர் மதுரை ஆஸ்டின்பட்டி சிவானந்த வித்யாலயா பள்ளியின் தாளாளர்.பகவத் கீதை சொற்பொழிவில் கைதேர்ந்தவர். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 4 மணிக்கு தத்தனேரி மின்மயானத்தில் நடைபெற உள்ளது மதுரை தோப்பூர் சிவானந்த தபோவனத்தில் அவரது பூத உடல் வைக்கப்பட்டுள்ளது அங்கு மதியம் 3 மணிக்கு பக்தர்களின் இறுதி பிரார்த்தனை நடைபெற உள்ளது இவருடைய பூர்வாசிரம சகோதரர்கள் சுவாமி விமலானந்தர் மற்றும் தற்போதைய தோப்பூர் சிவானந்த தபோவனம் தலைவர் சுவாமி சிவானந்த சுந்தரானந்தர் ஆகியோர். இவரது மற்றொரு சகோதரர் பொறியாளர் டீ.கே ராமன் ஆவார்.

scroll to top