சிவபெருமானுக்கு தனுர் மாத பிரதோஷம் சிறப்பு பூஜை, நடைபெற்றது

திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமானுக்கு பால் பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு விசேஷ பூஜையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் பால்சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பிரதோஷ விழா நடைபெறும்.
அதில் ,தனுர் மாத பிரதோஷம் மிகச் சிறப்பு இதனை காண ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு
சாமி தரிசனம் செய்தனர்.
அதில், சிவபெருமானுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு விசேஷ பூஜையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. மேலும், சிவபெருமானுக்கு மகா தீப, தூப, ஆராதனை நடைபெற்றது.

scroll to top