சிவனின் அருள் பெற சிவராத்திரி விரதம்

Lord_shiva.jpg

THE KOVAI HERALD

சிவன் மும்மூர்த்திகளுள் ஒருவர். சைவசமயத்தின் முழுமுதற் கடவுளாகவும், பிறப்பும், இறப்பும் இல்லாத பரம்பொருளாதலால் பரமசிவன் என அழைக்கின்றனர். இவர் தனது ஒரு பகுதியிலிருந்து அன்னை பராசக்தியை உருவாக்கினாரெனவும், பின்னர் இருவரும் இணைந்து ஆனந்த தாண்டவமாடி அண்டசராசரங்களை உருவாக்கினார்களெ ன்றும், தனது உடுக்கையிலிருந்து படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்து பணிகளுக்கும் அடிப்படையான ஓம் என்ற பிரணவ மந்திரத்தை உருவாக்கினார் எனவும் கருதப்படுகிறது. பின்னர் அன்னை பராசக்தி படைப்பிற்காக பிரம்மதேவரையும், அதன்பிறகு காப்பதற்காக காக்கும் கடவுளான விஷ்ணுவையும் உருவாக்கினார் என்றும் கருதப்ப டுகிறது. கடவுள்களில் ஊழிகாலத்தில் இவர் மட்டுமே நிலைத்திருப்பவராதலால் சதாசிவன் எனப்படுகிறார். சிவனின் இடப்புறத்திலிருந்து விஷ்ணுவும், வலப்புறத்திலிருந்து பிரம்மரும் உருவானார்கள்.
சமுத்திர மந்தன் என்று அழைக்கப்படும் பாற்கடலை வாசுகி என்ற பாம்பை கொண்டு தேவர்கள் கடைந்த போது விஷம் கடலில் கலந்தது. இது முழு உலகையும் அழிக்கக்கூடும் என்று தேவர்கள் நம்பியதால் பயந்தனர். பின் அவர்கள் சிவபெருமானிடம் உதவிக்காக சென்றபோது, அவர் கொடிய விஷத்தை குடித்தார், ஆனால் அதை விழுங்குவதற்கு பதிலாக தொண்டையில் வைத்திருந்தார். இதனால் சிவ பெருமானின் தொண்டை நீலமாக மாறியது, இதன் காரணமாக, அவர் நீல நிற தொண்டையான ‘நீல்காந்தா’ என்று அறியப்பட்டார். இந்த சம்பவம் நடைபெற்ற தினமே சிவராத்திரி.
உலகம் முழுவதும் சிவனடியார்களால், மனம் மகிழ்ந்து கொண்டாடப்படும் இந்த சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, விரதம் இருப்பவர்களை சிவனாக பூஜை செய்து வழிபடவும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க, அருள் புரியுங்கள் என்று பார்வதிதேவி சிவனை வேண்டிக் கொண்டாள்.சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அதுவே “சிவராத்திரி” என வழங்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.
சிவராத்திரிக்கு முதல் நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்கள் அனைத்தையும் உ தவிர்க்க வேண்டும். மறு நாள் சிவராத்திரி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதிக்கும் போது காலையில் செய்ய வேண்டிய பூஜைகள் செய்தபின், கோயிலுக்குச் சென்று முறைப்படி தரிசனம் செய்து திரும்ப வேண்டும். அதன் பின் பகலில் நீராடி, உச்சி கால பூஜைகளை முடித்து விட்டு சிவபூஜைக்கு உரிய பொருட்களை சேகரித்து, சூரியன் மறையும் வேளையில் சிவராத்திரி பூஜைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். 
விரதம் இருக்கும் முறை:
 முதல் யாமத்தில் சுவாமிக்குப் பஞ்சகவ்யத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும். பசும் பால், பசுந்தயிர், பசு நெய், பசுவின் சிறுநீர், பசுஞ்சாணம்- இந்த ஐந்தும் கலந்தது, பஞ்சகவ்யம்   அகில் குழம்பும், வில்வமும் சாற்ற வேண்டும். தாமரைப் பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். பயத்தம் பருப்பு கலந்த பொங்கலை நைவேத்தியம் செய்து, திருமுறைகள், ரிக் வேதம் சொல்ல வேண்டும்.இரண்டாம் யாமத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்ய வேண்டும். தேன், சர்க்கரை, தயிர், பால், நெய் ஆகிய ஐந்தும் கலந்தது பஞ்சாமிர்தம். இதில் தயிரை நீக்கி வாழைப்பழத்தைச் சேர்ப்பதும் உண்டு. சந்தனமும், தாமரைப் பூவும் சாற்ற வேண்டும். துளசியால் அர்ச்சனை செய்து பாயசம் நைவேத்தியம் செய்து, யஜுர் வேதம் சொல்ல வேண்டும்.மூன்றாம் யாமத்தில் தேன் அபிஷேகம் செய்ய வேண்டும். அரைத்த பச்சைக் கற்பூரம், ஜாதி முல்லை மலர் சாற்ற வேண்டும். மூன்று இலைகள் கொண்ட வில்வத்தால் அர்ச்சனை செய்து, எள் சாதம் நைவேத்தியம் செய்து, சாம வேதம் சொல்ல வேண்டும். மூன்றாம் காலத்தில் சிவனாரை வழிபட்டால் எப்பேர்பட்ட பாவங்கள் செய்திருந்தாலும் விட்டு விலகிப் போகும். அதாவது, தன்னால் ஒதுக்கப்பட்ட, தான் ஏற்றுக்கொள்ளாத விஷயங்களைக்கூட சிவபெருமான் அந்த நேரத்தில் ஏற்றுக் கொண்டு, மன்னித்து அருள்புரிவாராம். அந்த அளவிற்கு மகத்துவம் மிக்க நேரம் அது.நான்காம் யாமத்தில் கரும்புச் சாறினால் அபிஷேகம் செய்து, அரைத்த குங்குமப் பூவுடன் நந்தியாவட்டை மலர் சாற்ற வேண்டும். நீலோத்பல மலரால் அர்ச்சனை செய்து சுத்தமான அன்னத்தை நைவேத்தியம் செய்து, அதர்வண வேதம் சொல்ல வேண்டும்.
அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து குடும்பத்தினருடன் உணவருந்தி விரத்தை நிறைவு செய்ய வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படிக்க வேண்டும். சிவராத்திரி விரதம் அனைவரும் இருக்கலாம். மன அமைதி, சகல செல்வங்கள் பெற்று நலமுடன் வாழலாம்.
கோவை பகுதியில் 1000 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள சிவத்தலங் களில் சித்தர்கள் வழிபட்ட தலமான தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் கரிகால் சோழனால் கட்டப்பட்ட பேரூர் பட்டீஸ் வரர் கோவில், கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில், வடமதுரை விருத்தகிரீஸ் வரர்  கோவில், எமனுக்கு சாப விமோசனம் அளித்த கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவில், அன்னூர் மன்னீஸ்வரர் ஆலயம், அவிநாசி, அவிநாசி லிங் கேஸ்வரர் கோவில், மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் மலைக் கோவில், வெள்ளலூர் தேனீஸ்வரர்  கோவில், மற்றும் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் சத்குரு ஜக்கி வாசு தேவால் உருவாக்கப்பட்ட ஆதியோகி சிவன் சிலை ஆகிய  கோவில்களில் சிவனை வழிபட்டு அனைவரது வேண் டுதல்களை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

வில்வ இலைகள்
சிவராத்திரி நாளில ஒரு காட்டில் பல பறவைகளை கொன்ற வேட்டைக்காரன் ஒருவனை பசியுள்ள சிங்கம் ஒன்று துரத்தி சென்றுள்ளது. சிங்கத்தின் தாக்குதலில் இருந்து தன்னைக் காப்பாற்ற அவன் வில்வ மரத்தில் ஏறினார். சிங்கம் மரத்தின் அடிப்பகுதியில் இரவு முழுவதும் காத்திருந்தது. மரத்திலிருந்து தூக்கத்தில் விழுவதைத் தவிர்ப்பதற்காக விழித்திருக்க வேட்டைக்காரர் வில்வ மரத்தின் இலைகளை பறித்து கீழே போட்டு கொண்டே இருந்தார். அப்போது மரத்தின் அடிப்பகுதியில் அமைந்திருந்த ஒரு சிவலிங்கத்தின் மீது இலைகள் விழுந்தன. வில்வ இலைகளை வழங்குவதன் மூலம் மகிழ்ச்சி அடைந்த சிவன், பறவைகளை கொல்வதன் மூலம் வேட்டைக்காரன் செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்து வேட்டைக்காரனைக் காப்பாற்றினார். இந்த நிகழ்வு சிவராத்திரியில் வில்வ இலைகளுடன் சிவனை வழிபடுவதன் முக்கியத் துவத்தை வலியுறுத்துகிறது.

சிவ-சக்தி
சிவன் மற்றும் சக்தியின் திருமணத்தின் புராணக்கதை மகாசிவராத்திரி பண்டிகை தொடர்பான மிக முக்கியமான புராணக்கதைகளில் ஒன்றாகும். சிவன் தனது தெய்வீக மனைவியான சக்தியுடன் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டதை கதை விவரிக்கிறது. சிவன் மற்றும் சக்தியின் புராணங்களின்படி, சிவன் பார்வதியை மணந்த நாள் சிவராத்திரி.

……………KAMALA KANNAN.S Contact No: 9244317182

scroll to top