சிவகாசி ஸ்ரீமுருகன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து நேர்த்திக்கடன் செலுத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், ஸ்ரீசுப்பிரமணியர் சன்னதி என்ற ஸ்ரீமுருகன் கோவிலில், இன்று ஆடி கார்த்திகை தினத்தை முன்னிட்டு அதிகாலையில் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஆடி கார்த்திகையை முன்னிட்டு சிவகாசியின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்துவந்து ஸ்ரீசுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். மேலும் ஸ்ரீவிஸ்வநாதர் கோவிலில் உள்ள ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆடி கார்த்திகை தினத்தில் ஸ்ரீமுருகப்பெருமானை வேண்டி, ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர். இன்று மாலை சுவாமி தரிசனம் செய்துவிட்டு விரதத்தை நிறைவு செய்வார்கள்.