சிவகாசி, ஸ்ரீமாரியம்மன் வேதாள வாகனத்தில் எழுந்தருளினார்

WhatsApp-Image-2023-04-06-at-1.16.23-PM.jpeg.jpg

விருதுநகர் மாவட்டம் சிவகாசியல் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமாரியம்மன் கோவிலில், பங்குனிப் பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீமாரியம்மன் கோவிலில், பங்குனிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றன. ஸ்ரீமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில், வேதாள வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதனையடுத்து ஸ்ரீமாரியம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்று, அம்மன் கடைக்கோவிலில் எழுந்தருளும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

scroll to top