சிவகாசி மாநகராட்சியில் தேங்கி நிற்கும் மழை நீர்: சேவை மையத்திற்கு செல்லும் மக்கள் சிரமம்

WhatsApp-Image-2022-07-29-at-4.35.58-PM-1.jpeg

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியின் 2-ம் மண்டல அலுவலகம் திருத்தங்கல்லில் செயல்பட்டு வருகிறது. இந்த மண்டல அலுவலகத்தில், மாநகராட்சியின் அலுவல் பணிகள் நடைபெற்று வருகிறது. மண்டல அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இ-சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த சேவை மையம் அமைந்துள்ள பகுதியில், சிறிய அளவில் மழை பெய்தாலும் மழைநீர், குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால், இ-சேவை மையங்களுக்கு ஆதார் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் பதிவு செய்வதற்காக குழந்தைகளை அழைத்து வரும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மழைநீர் வழியாமல் தேங்கி நிற்பதால், அங்கு செல்லும் முதியவர்களும் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே ,மண்டல அலுவலக வளாகப் பகுதியில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

scroll to top