சிவகாசி மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மழை, பொதுமக்கள் மகிழ்ச்சி

IMG-20220719-WA0003.jpg

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சிவகாசி பகுதியில், கடந்த சில நாட்களாக கோடை காலம் போல கடுமையான வெயில் இருந்து வருகிறது. இரண்டு நாட்களாக வெயில் குறைந்து, குளிர்ந்த காற்றும், அவ்வப்போது பலத்த காற்றும் வீசி வந்தது. இந்த நிலையில் இன்று காலை முதல் வழக்கமான வெயில் சுட்டெரித்தது. வெட்கை அதிகரித்த நிலையில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. மாலை நேரத்தில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், திடீரென்று மேகங்கள் திரண்டுவந்து பலத்த மழையாக பெய்யத் துவங்கியது. அம்மன் நகர், செல்லையநாயக்கன்பட்டி, நாரணாபுரம், சிவகாமிபுரம், சேர்மா நகர், ஆர்.ஆர்.நகர், அனுப்பன்குளம், மேட்டமலை உட்பட பல இடங்களிலும் சுமார் ஒரு மணி நேரம் பரவலாக மழை பெய்தது. மழையின் காரணமாக வெட்கை குறைந்து, இதமான சூழல் ஏற்பட்டது. சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெய்த திடீர் மழையால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோல், மதுரை நகரில் பல இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மதுரை அண்ணாநகர், மேலமடை, வண்டியூர், கருப்பாயூரணி, கோரிப்பாளையம் பகுதிகளில் மழை பெய்தது.

scroll to top