சிவகாசி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமானப் பணிகளை மேயர் நேரில் ஆய்வு

WhatsApp-Image-2023-04-05-at-7.03.13-PM-1.jpeg

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை, மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருத்தங்கல் பகுதியில் உள்ள சுக்கிரவார்பட்டி சாலையில் உள்ள பாலம் கட்டும் பணிகளை மேயர் ஆய்வு செய்தார். மேலும், 2வது வார்டு பகுதியில் உள்ள ஸ்டாண்டர்டு காலனியில் கட்டப்பட்டு வந்து, பாதியில் நிறுத்தப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை பார்வையிட்ட மேயர் சங்கீதா இன்பம், கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், வடக்கு ரத வீதியில் தார்சாலை மேம்படுத்தும் பணிகள், பழனிச்சாமி நாடார் வீதியில் கழிப்பறைகள், சாலைகளில் கல் பதிக்கும் பணிகள் மற்றும் 9வது வார்டு, 10 வது மற்றும் 20வது வார்டு பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகளையும் மேயர் நேரில் ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது துணை மேயர் விக்னேஷ்பிரியா, மண்டல தலைவர் குருசாமி, கவுன்சிலர்கள் செல்வம், சேதுராமன், சசிகுமார், கணேசன், துரைப்பாண்டி, பொன்மாடத்தி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.

scroll to top