சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து

சிவகாசி அருகே உள்ள புதுப்பட்டி என்ற பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் பட்டாசு ஆலை ஒன்றில், இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த ஆலையில் சுமார் 30 பேர் பணியாற்றி வந்த நிலையில், வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளதாகவும், மற்றவர்களை மீட்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பட்டாசுகள் வெடித்து இரண்டு அறைகள் தரைமட்டமான நிலையில் தீயணைக்கும் பணி நடந்து வருகிறது.

விபத்து நடத்த பகுதிக்கு காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. புத்தாண்டு அன்று நிகழ்ந்துள்ள இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

scroll to top