சிவகாசி அருகே, சட்ட விரோதமாக பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தவர் கைது

WhatsApp-Image-2023-05-01-at-11.22.40.jpg

விருதுநகர் மாவட்டம் சிவகாசி, பெரிய கருப்பன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சீவிபாபு (61). இவர் சிவகாசி – சாத்தூர் சாலையில் உள்ள பாறைப்பட்டி பகுதியில் பட்டாசு விற்பனை கடை வைத்துள்ளார். இவர் பட்டாசு விற்பனை கடையின் அருகில் சட்ட விரோதமாக பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் சம்பந்தப்பட்ட பகுதியில் திடீர் சோதனை செய்தனர். அப்போது சஞ்சீவிபாபு, தனது பட்டாசு கடைக்கு அருகில் உள்ள ஒரு குடோனில் உரிய அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த 10 பெட்டி பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், சஞ்சீவிபாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

scroll to top