சிவகாசியில் 3 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், அமைச்சர்கள் வழங்கினர்

WhatsApp-Image-2021-12-21-at-14.16.23.jpeg

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தனியார் திருமண மண்டபத்தில், மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழிற்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினர். சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1,482 பயனாளிகளுக்கு 3 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வழங்கினர். நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சிவகாசி எம்எல்ஏ அரசன் அசோகன், விருதுநகர் எம்எல்ஏ ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி, சிவகாசி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் முத்துலெட்சுமி, வட்டாட்சியர் ராஜகுமார், சிவகாசி ஊராட்சி ஒன்றிய குழுத் துணைத்தலைவர் விவேகன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

scroll to top